திருகோணமலை , கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கவெவ பகுதியில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் சூரியபுரையச் சேர்ந்த எச் . ஆர் .பொடி மாத்தையா என்ற 74 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





