மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் .

 







 வரதன்

 மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு விஜயம்  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்    மாவட்டத்திலுள்ள  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன்  விரிவாக  கலந்துரையாடினார் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிபணிப்பாளர் ருக்ஸான் குரூஸ் தலைமையில் குறித்த சந்திப்பு  இடம் பெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடற்தொழிலில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் ,மீனவர் சங்கங்க ங்களின் பிரதிநிதிகள், கடற்தொழில் பரிசோதகர்கள் என பலரும் கலந்துரையாடலில்  பங்கு கொண்டிருந்தனர் .

மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனையான சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. மீனவர்கள் தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறியதுடன் அவர்களது  பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக  அமைச்சர் மீனவர்களுக்கு உறுதியளித்தார்,

மட்டக்களப்பு வாவியின் உள்ள மீன் இனங்களை பாதுகாக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இப்பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த  தமது  அமைச்சில் இயங்கிய கடற்தொழில் தொண்டர் படையினரை  கடற்படை மற்றும் போலீசாரின் வழிகாட்டலின் கீழ் அவற்றை இயங்கச் செய்ய உள்ளதாகவும்   தெரிவித்தார் .