மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் பிரியாவிடை நிகழ்வு!



(


கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள விரிவுரையாளர்களின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  (16) மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது நீண்டகாலம்  இணைந்திருந்து சேவையாற்றி தற்போது அட்டாளைச்சேனை NCOE இற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள  விரிவுரையாளர்களான ஏ.எஸ்.எம். சதாத் மற்றும் எம்.சி.ஏ. ஜெஸீம் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு,பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரியர் கல்வியலாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்நிகழ்வில், கல்லூரியின் பீடாதிபதி ரி.கணேசரெத்தினம் மற்றும் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.