மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு ஐஸ்கிரீம் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது

 

 

 

 



 
















 FREELANCER

 

வெசாக் பௌர்ணமி  தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை   நலன்புரிச்சங்கத்தினரின் ஒழுங்கு படுத்தலில்  சிறைச்சாலை வளாகத்தினுள்   பொது மக்களுக்கு ஐஸ்கிரீம் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது
இதன்போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் வரிசையில் கூடி நின்று வெசாக் தன்சல்களை பெற்றனர்.
பெரியவர்கள் , சிறுவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் உற்சாகத்துடன் ஐஸ்கிரீம் தன்சல் பெற்றுக்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான,
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முரளிதரன் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக பங்கேற்றனர்.