இந்தோனேசியா பாலி பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சர்வதேச விழாவில் விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி ஜெயகிருஷ்ணா ஜெயரக்ஷா கௌரவிக்கப்பட்டார் .

 



 




 



 FREELANCER

 மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில்  ஆறாம் ஆண்டில் பயிலும்   மாணவி ஜெயகிருஷ்ணா  ஜெயரக்ஷா   அவர்கள் ,  இந்தியா சங்கமம் குளோபல் அகாடமி நிறுவனத்தால்   ஒழுங்கமைக்கப்பட்ட,   ஒன்பதாவது நித்தியாஞ்சலி சர்வதேச விழா  இந்தோனேசியா   பாலி பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற
 விழாவில்  மாணவி ஜெயகிருஷ்ணா  நாட்டிய விழாவில்     பங்கு பற்றியமைக்காக  சர்வதேச     சிறப்பு    சான்றிதழ்களும்  வெற்றி கேடயங்களும்     வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்   
  மட்டக்களப்பு மண்ணுக்கும்   விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கும்  சர்வதேச ரீதியில்      பெருமை தேடித்தந்தமைக்காக  பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களால்  பாடசாலை ஒன்று கூடல் நிகழ்வின்  போது    பாராட்டப்பட்டார்