மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய வெசாக் கண்காட்சியும் வெசாக் தன்சல் நிகழ்வும் .

 

 

 











 



















































FREELANCER

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய   வெசாக்  கண்காட்சி நிகழ்ச்சியானது   மண் முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி .  அமலினி  ரஞ்சித் குமார் தலைமையில்   மண்மனை வடக்கு கலாசாரம் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது      
 இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மண் முனை வடக்கு பிரதேச செயலாளர்  வ.வாசுதேவன்  அவர்கள் கலந்து கொண்டார் இதன் போது  18.05.2024    அன்று  இடம்பெற்ற  வெசாக் அலங்காரக்  கூடு    கட்டும்் போட்டி நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பண பரிசல்கள் வழங்கப்பட்டது.
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் இலவச  பாடநெறியினை கல்வி பயின்று வருடம் தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டமாணவர்கள் வெளியேறுகின்றனர் இவ்வாறு 2024ஆண்டு  சுமார் 600 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டு கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இதில் சிங்களம் மற்றும் ஆங்கில பாடத்தினை கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்தி இருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில்  வெசாக்    தன்சல் நிகழ்வு இடம் பெற்றது ,மண் முனை வடக்கு பிரதேச செயலாளர்  வ.வாசுதேவன்  அவர்கள் வெசாக்    தன்சல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .பார்வையாளர்களுக்கும் , பொது மக்களுக்கும் சிற்றுண்டிகள்  வழங்கப்பட்டன