மட்டக்களப்பு இந்து கல்லூரி தேசிய பாடசாலையின் உள்ளக வீதி புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

 


வரதன்

 கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பு கல்வி வலயத்தி உட்பட்ட. இந்து கல்லூரி தேசிய பாடசாலையின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பாடசாலையின் உள்ளக வீதிகள் மழைக்காலங்களில் பாதிக்கப்படுவதை பாடசாலை சமூகம் ராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து 10 மில்லியன் ரூபா செலவில் 150 மீட்டர் நீளமான வீதியினை காங்கிரீட்  வீ தியாக புணரமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது


இப்பாடசாலை ஆனது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய தேர்தல் வாக்குகள் என்னும் பிரதான நிலையமாக காணப்படுவதனால் இதனையும் கருத்தில் கொண்டு இப்ப பாடசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு ராஜாங்க அமைச்சரினால் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ராஜாங்க அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பு. பிரசாந்தன் கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார்

நிகழ்விற்கு கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.