சஜித் பிரேமதாச, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் போராட்டமொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது. 

எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொள்ளுப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் சிறுவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

இப்போராட்டம் Friends of Free Palestine இனால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.