5ம் தர புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி நடைபெறும்.

 


2024ம் ஆண்டுக்கான 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 27ஆம் திகதி முதல், ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விண்ணப்ப திகதி முடிவடைந்ததன் பின்னர் நீடிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.