வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அரச பொதுமன்னிப்பு பெறும் கைதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 கைதிகளும் அடங்குவதாகவும், 10 பெண் கைதிகள் உட்பட அனைத்து சிறைச்சாலைகளில் இருந்து 278 கைதிகளும் அடங்குவதாக திஸாநாயக்க தெரிவித்தார்.





