மட்டக்களப்பு-சத்துக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் -2024


 








 

FREELANCER

 மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான்   திருவருள்மிகு கண்ணகி அம்மன்  ஆலய வருடாந்த சடங்கு   உற்சவ மகா சக்தி பெருவிழாவானது  எதிர்வரும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசித் திங்கள் 05  நாள் 18.05.2024  (சனிக்கிழமை )   தசமி திதியும்  உத்திராட நட்சத்திரமும்  கூடிய சுப வேளையில்    தாயவளின்  திருக்கதவு திறத்தளுடனும் ஆரம்பமாகியது ,  தொடர்ந்து சடங்கு உற்சவம்   5   நாட்கள் நடைபெற்று வைகாசி திங்கள்10திகதி  23.5.2024.வியாழக்கிழமை பௌர்ணமி அன்று அதிகாலை 5.30 அளவில்  அம்மனின் திருக்குளிர்த்தி  மற்றும் ஏனைய வைபவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
 சடங்கு  உற்சவம் யாவும் ஆலய பிரதம குரு சிவா ஸ்ரீ  வே. பொன்னுத்துரை அவர்களின் தலைமையில் இடம் பெறும்.
2024.5.22 அன்று புதன் கிழமை இரவு டிஷாந்தன்  ஜ்யோதினி அவர்களின் பங்களிப்பில் அன்னதானம்
 .வழங்கப்பட உள்ளது .
மேலும் 2024.5. 21அன்று மாலை  கலைச்சுடர்  விஸ்வநாதன் பத்மஸ்ரீ பாடிய   கண்ணகி அம்மன்  ஆலய முதலாவது பக்தி ரச  காவிய பாமாலை  இறுவெட்டு  வெளியீடு ஆலய முன்றலில் நடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது