மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கு -2024



 




 வரதன்

கிழக்கில் கண்ணமை அம்மன் திருச்சடங்கு கழைகட்டியுள்ளன. இந்நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மிகவும் பிரசித்தி வாய்ந்ததுமான, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு  (16.05.2024) மாலை  சம்பிரதாயபூர்வ  ஆரம்பமாகியது.

 புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வர் ஆலயத்தில் இருந்து அம்மன் திருவுருவச் சிலை பக்தி பூர்வமாக எழுந்தருளி செய்யப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மேள தாள வாத்தியங்கள் முழங்க பட்டாசு சத்தம் வானைப் பிளக்க, பூஜைப் பெட்டிகளுடன், பக்கதர்களின் அரரோகரா சத்தம் விண்ணதிர கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

 ஆரம்பமாகியுள்ள  அம்மனின் சடங்குற்சவம் எட்டு நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 20 ஆம் திகதி திருக்கல்யாண கால் வெட்டும் சடங்கு நடைபெறும், தொடர்ந்து 21 ஆம் திகதி திருப்பச்சை கட்டு சடங்கு இடம்பெற்று 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் திருக்குளிர்தி வைபவத்துடன் இவ் வருடத்திற்கான திருச்சடங்கு நிறைவுபெறும்.