மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் 10 மாணவிகள் 9Aபெற்று சாதனை புரிந்துள்ளனர் .


 









 

 FREELANCER

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா  மகளிர் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் தோற்றிய  மாணவி  செல்வி ஏரம்பமூர்த்தி அக்ஷாணி 8 A 1B இல் சித்தி பெற்றிருந்த நிலையில்  B பெற்றிருந்த பாடத்தை  மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பித்து இருந்தார் , பரீட்சை திணைக்களம் பரிசீலனையின்  பின்னர் குறிப்பிட்ட பாடத்தில் எ சித்தி பெற்றதாக உறுதிப்படுத்தி இருந்தது. .
ஏற்கனவே விவேகானந்தா  மகளிர் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் 9 மாணவிகள்   9-A பெறுபேறுகளை  பெற்று  சாதனை  புரிந்துள்ளனர் , தற்போது 10மாணவிகள் 9Aபெற்று புதிய சாதனையை   நிலைநாட்டி உள்ளனர் .
அதிபரின் தலைமையின் கீழ் கல்லூரி நிர்வாகமானது சிறப்புடன் செயற்பட்டதன் காரணமாக சிறப்பான பெறுபேறுகளை    பெற்றுள்ளார்கள்.இது   கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய  முன்னேற்றத்தை காட்டுகிறது

.சிறப்பான பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும்  பெற்றோர்களுக்கும் பெருமை   தேடித்தந்த மாணவிகளுக்கு  கல்விச்  சமூகம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது .