20 மில்லியன் செலவில் அமையவுள்ள மாதுளை பதப்படுத்தல் நிலையத்திற்கு அடிக்கல் நட்டு வைப்பு.








 
வரதன்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதுளைப் பயிற் செய்கை மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இந்த மாதுளைப் பயிற் செய்கைக்குரிய பதப்படுத்தும் நிலையம் அமைப்பதற்குரிய அடிக்கல் நடும் நிகழ்வு களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியில் 06.05.2024 pm நடைபெற்றது.

 விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தினால் சுமார் 20 மில்லியன் செலவில் இந்த மாதுளை பதப்படுத்தல் நிலையம் அமையவுள்ளது. அப்பிரதேசத்தில் 150 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு மாதுளைப் பயிற் செய்கையில் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

 களுவாஞ்சிகுடி அக்றி விலேஜ் அமைப்பின் தலைவர் சீ.மதிசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் இ.ஞானச்செல்வம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.அறிவழகளன், விவசாய விஞ்ஞானி அருள்நந்தி, கட்டடங்கள் திணைக்களத்தின் பொறியியலாளர் சந்திரமோகன், அப்பகுதி உதவி விசாயப் பணிப்பாளர் திருமதி நித்தியா ரூபன், மற்றும் விவசாயிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.