(கல்லடி செய்தியாளர்)
அன்னையர் தினைத்தை முன்னிட்டு BATTIMEDIA மீடியா,கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து மட்டக்களப்பு மகிழவெட்டுவான் கற்குடாவைச் சேர்ந்த திருமதி ஆத்தப்பிள்ளை வீரக்குட்டி (வயது - 83) 16 பிள்ளைகளைப் பெற்று வையகத்தில் அவர்களைச் சிறப்புற வாழ வழிவகுத்தமையைப் பாராட்டி அன்னையர் தினத்தில் அவரது இல்லத்தில் வைத்துப் பாராட்டப்பட்டார்.
இதன்போது இம்மூன்று அமைப்பினரும் இணைந்து அவருக்கு பொன்னாடை போர்த்தி, பரிசுப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் BATTI மீடியா ஊடகம் ,கதிரவன் பட்டிமன்றப் பேரவைத் தலைவர் கதிரவன் த.இன்பராசா மற்றும் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







