மழை மற்றும் காற்றுடனான வானிலை அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை அண்மித்து ஏற்பட்டுள்ள, பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான தளம்பல் நிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாள்களில் அதிக மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





