மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திந்திபிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று(2024.04.14) ஆரம்பமாகியது.












செல்வா சிந்து

இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக 64 அடி உயர  இராஜகோபுரத்தினையுடைய மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பிரமோற்வசவம் இன்று வரும் 14.04.2024திகதி ஞாயிற்றுக்கிழமை காலை  செட்டிபாளையம் சித்தி விநாயகர்  ஆலயத்தில் இருந்து யானை மீது கொடியேற்றத்துக்கான கொடிசீலை எடுத்து வரப்பட்டு  11.30 மணியளவில் கொடியேற்றம் இடம் பெற்றது.
இன்று மாலை விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப  அலங்காரபூஜை, சுவாமி உள்வீதி வெளி வீதி திருவிழா இடம் பெறும்.  திருவிழா காலங்களில் போது பிள்ளையார்,சிவன்பார்வதி,விஷ்ணு,வள்ளிதெய்வானை சமமேத முருகபெருமான் மற்றும் சண்டஸ்வர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருவிழா காலங்களில் பவனி வருகை  தொடச்சியாக ஒன்பது தினங்கள் இடம் பெற்று பத்தாம் நாள் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.
 பிரமோற்வசவ திருவிழா காலங்களில் புஸ்பாஞ்சலி திருவிழா, கர்ப்பூரஜோதித்திருவிழா,(அடியார்கள் கர்ப்பூர சட்டி ஏந்தலாம்  சதுர்வேதகோஷத்திருவிழா, பஞ்சமுக அர்ச்சனை திருவிழா(அடியார்கள் தங்கள் நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்யலாம்),  மாம்பழத்திருவிழாவும், வேட்டைத்திருவிழா(தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெறவுள்ளது சப்பரத்திருவிழாவும் எட்டாம் நாள் சித்திர தேர் வெள்ளோட்டமும் ஒன்பதாம் காலை சித்திர தேர்ரோட்டமும் இடம் பெற்று நாள் பத்தாம் நாளாகிய சித்திரா பௌர்ணமியன்று தீர்த்தோற்சவமும்; தீர்த்தோற்சவத்தின் போது அடியார்கள் பீதிர்கடன் செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும் திருப்பொன்னூசல், சண்டேஸ்வரர் உற்சவம்,ஆச்சாரியார் உற்சவமும் ,இடம் பெறவுள்ளது. மேலும் பூங்காவன திருவிழா மற்றும் பைரவர் பூஜையும் இடம் பெறும்  மேலும் திருவிழா காலங்களில் ஆலய முன்றலில் பல்வேறுபட்ட சமய  கலை நிகழ்வுகள் அறநெறி போட்டிகள் என்பன இடம்பெற உள்ளது என ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராசா தெரிவித்துள்ளார்