சித்தாண்டி மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு.






























































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு ஆதித்தி கைத்தறி நெசவு தொழிற்சாலை  நிறுவனர் திருமதி கீதா சுதாகரன் மற்றும்  மட்டக்களப்பை சேந்த நலம் விரும்பி  ஒருவரின்  அனுசரணையுடன் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்கி, வீடு திரும்பிய சித்தாண்டி மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட  குடும்பங்களுக்கு   திருமதி கீதா சுதாகரன் தலைமையில்    ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள்  இன்று புதன்கிழமை (17) வழங்கி வைக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ்  வாழும் வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கும்   பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும்    உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்வு சோபனன் மற்றும் பத்ம நிதன் ஆகியோரின்  ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.