(கல்லடி செய்தியாளர்)
சாதனைப் பயணத்தில் தங்களை அர்ப்பணித்துள்ள கலைஞர்களை மகுடம் சூட்டிக் கௌரவிக்கும் வெல்ஸ் உன்னத நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கில் நேற்று சனிக்கிழமை (20) இரவு இடம்பெற்றது.
வேவ் நடனப்பள்ளி இயக்குனர் எஸ்.கிருஸ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கலைகள் நிறுவகப் பணிப்பாளர் திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது நாடளாவிய ரீதியாக இசை, நடனம், கல்வி, ஊடகத் துறைகளில் சிறப்பாகச் செயற்படும் 48 கலைஞர்கள் விருது, சான்றிதழ் மற்றும் மட்டக்களப்பின் இயற்கை அழகை இரசிப்பதற்கான இலவச டிக்கட் என்பன வழங்கப்பட்டன.
இவ் மகுடம் சூட்டும் விழாவில் பாடல்கள், நடனம் ஆகிய நிகழ்வுகள் பார்ப்போரை கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




































































