(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு ஆயித்தியமலை நெல்லிக்காடு பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வாழ்வாதாரம் இழந்த பெண்மணி ஒருவருக்கு புலம்பெயர் தேசத்து நலன் விரும்பி ஒருவரின் அனுசரணையில் ஆதித்தி கைத்தறி நெசவு தொழிற்சாலை நிறுவனர் திருமதி கீதா சுதாகரன் , மற்றும் சமூக செயற்பாட்டாளர் K.கௌரி ஆகியோரின் ஒழுங்கு படுதலின் கீழ் சிறிய அங்காடி ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டதோடு, உணவுப் பண்டங்களை த் தயாரிப்பதற்கான ஒரு தொகுதி மூலப் பொருட்களும் நேற்று சனிக்கிழமை (20) வழங்கி வைக்கப்பட்டது.
வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சுயதொழிலை ஊக்குவிக்கும் செயற் பாட்டின் கீழ் இவ் உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .












