(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு பிள்ளையாரடியில்
சாமான்களை ஏற்றி வந்த கொள்கலன் வண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை புடைசாய்ந்ததில் அதிலிருந்த பொருட்கள் யாவும் கீழே வீழ்ந்துள்ளன.
வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியின் நித்திரைத் தூக்கமே இந்நிலை ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வாகனத்தைச் செலுத்திய சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)






