மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பண்பாட்டலுவலகமும் இணைந்து நடத்திய பொங்கல் விழா-2024

!



























(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பண்பாட்டலுவலகமும் இணைந்து நடத்திய காணும் பொங்கல் விழா மட்டக்களப்பு காந்திப்பூங்கா வளாகத்தில் இன்று சனிக்கிழமை (20) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டப் பண்பாட்டலுவலகத்தின் இணைப்பாளர் தங்கராசா மலர்ச்செல்வன் மற்றும் மட்டக்களப்பு பொதுநூலகப் பிரதம நூலகர் த.சிவராணி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எந்திரி ந.சிவலிங்கம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும், மட்டக்களப்பு மாநகரசபை பொறியியலாளர் திருமதி சி.லிங்கேஸ்வரன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சா.ரவிராஜ், மட்டக்களப்பு மாநகரசபை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கி.பிறேம்குமார் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி ல. ஜெகதீஸ்பரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் வரவேற்கப்பட்டு, நெற்கதிர் அடிக்கப்பட்டு, அரிசி புடைக்கப்பட்டு, அதனைக் கொண்டு பொங்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விளக்கேற்றல், மக்கள் நடனம், மக்கள் பாடல், உருப்பிணி கல்யாணம் ( வடமோடிக் கூத்து) ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.