ஓசானம் இல்லத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிவிழா மற்றும் கட்டிடத் திறப்பு விழா!


'










































 (கல்லடி செய்தியாளர்)

ஓசானம் இல்லத்தின் ஏற்பாட்டில் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் ஒளிவிழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் இல்லத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.இளம்குமுதனும், வீதி அபிவிருத்தி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் இ.காண்டீபாவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஓசானம் இல்லச் சிறார்களின் பாடல் மற்றும் நடன நிகழ்வுகள் அரங்கேறின. அத்தோடு இல்லச் சிறார்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் நினைவுக் கல்லைத் திரைநீக்கம் செய்து, கட்டிடத்தினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை திறந்து வைத்தார்.

இக்கட்டிடத்தினை அமரர் திருமதி கங்கேஸ்வரி கந்தையாவின் ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தினை அமைப்பதற்காகப் பொறியியலாளர் இளங்கோ காண்டீபா இரவு பகல் பாராது உழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் சேவையைப் பாராட்டி, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.