மட்டக்களப்பில் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு.









(கல்லடி செய்தியாளர்)


ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதி (ரெட்ணா) வின் 17 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச்செயலாளர் தோழர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈரோஸ் நிறுவனர் தோழர் ரெட்ணசபாபதி (ரெட்ணா) வின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடரேற்றப்பட்டது

இந்நினைவேந்தல் நிகழ்வில், ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இரா.இராஜராஜேந்திராவின் தொடக்கவுரையோடு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுபப்பினர் தோழர் சோ.புஸ்பராஜா மற்றும் தோழர்களான திருமதி சுமதி மகேசன், திருமதி கமலினி உட்பட பலர் தோழர் ரெட்ணசபாபதியின் நினைவுகளைப் பதிவு செய்தனர்.

இதன்போது ஈரோஸ் அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.