மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற "மட்டு முயற்சியாண்மை - 2023" பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி! -2023.11.27






















மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில்
 "மட்டு முயற்சியாண்மை - 2023" பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி  மண்முனை வடக்குப் பிரதேச செயலக வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற
இந் நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர்களான சியாஹூல்ஹக், திருமதி.பிரசாந்தன்  லக்சண்யா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி கணேசமூர்த்தி ஜெயராஜினி மற்றும் திருமதி சி.பிரணவசோதி, மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான  தே.கிருஷ்ணவேணி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கண்காட்சியில் கைப்பணிப்பொருட்கள், உள்ளூர் உணவு வகைகள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட   வைன் , பூ மரக்கன்றுகள், பாதணிகள் மற்றும் தைத்த ஆடைகள், மரத்தினாலான கைவினைப் பொருள்கள் என்பன  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவ் விற்பனைக் கண்காட்சியானது  உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் பேருதவியாக அமைந்தது.

இக்கண்காட்சிக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களைப் பிரதேச செயலகத்துக்கு வருகை தந்த பொதுமக்கள்  ஆர்வத்துடன் கொள்வனவு செய்திருந்ததைக் காணமுடிந்தது.