சட்டங்களை போட்டு சமூக ஊடகங்களையும், ஊடகங்களையும் கட்டுப்படுத்த முடியாது .

 


சமூக ஊடகங்களை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய மஹிந்த தேசப்பிரிய, இவ்வாறு சட்டங்களை போட்டு சமூக ஊடகங்களையும், ஊடகங்களையும் கட்டுப்படுத்த முடியாது எனவும் குறைந்த பட்சம் அவற்றை ஒழுங்குபடுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

“ஊடகத்திலோ அல்லது பேச்சுரிமையிலோ பேச்சு சுதந்திரம் என்பது எந்த நேரத்திலும் சட்டங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. ஒழுங்குமுறையும் சாத்தியமற்றது. விவாதம், ஒருமித்த கருத்து மற்றும் உடன்பாடு மூலம் கெட்டதைச் செய்யாமல் நல்லதைச் செய்யுங்கள்.

ஆனால், இந்தச் சட்டங்கள் எதையும் செய்ய முயல்கின்றன என்றால், விமர்சிப்பது, மக்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது, பொதுமக்களின் குரலை நசுக்குவது, முறையான விவாதம் இன்றி இதுபோன்ற சட்டங்களை திணிப்பது ஜனநாயக சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல.

தண்டனை இருந்ததோ இல்லையோ கருத்து சொல்லும் உரிமையை தடுக்க முடியாது.. இறப்பர் பந்தை தண்ணீருக்கு அடியில் திணிப்பது போல் இந்த நடவடிக்கை உள்ளது. கருத்துக்கள் வெளிவர அனுமதிக்கவில்லை என்றால் வேறு வழியில் வெளிப்படும். அது தான் யதார்த்தம்”