மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வு!!
இந்நிகழ்வில் புள்ளி விபரவியலாளரும் பிரதி தொகை மதிப்பு அத்தியட்சகருமான ரி.ஜெய்த்தனன் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், மேற்பார்வை நிரற்படுத்தும் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வானது 03 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றதுடன் இதில் குடிசன வீட்டுவசதிகள் தொகை மதிப்பீட்டிற்கான விசேட கணனி செயலியை பயன்படுத்துதல் தொடர்பான செயன்முறைப் பயிற்சிகள், விண்ணப்பப் படிவங்களை விவேகமாகாமவும் வேகமாகவும் பூரணப்படுத்தல் போன்ற முறைமைகள் தெளிவுபடுத்தப்பட்டது.









