அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் உத்தரவாதம் வழங்கப்பட்டது

 


கிழக்கு மாகாணத்தில் சிங்கள,தமிழ் மக்களிடையே முரன்பாடுகள் ஏற்படாமல் தவீர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களின்; பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தரவாதம் வழங்குவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
சித்தாண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.

13 ஆவது நாளாக மட்டக்களப்பு சித்தாண்டியில் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்திற்கு பொருத்தமான தீர்வொன்றை பெற்று கொடுக்கும் வகையில் நேற்று மாலை இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
தற்போது பெரும்போக வேளான்மை செய்கைக்காக உழவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கால் நடைகளை அகற்றவேண்டிய தேவை உள்ளதாகவும் அதற்கு இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உதவிபுரிய வேண்டும் என்று பண்ணையாளர்களினால் கோரிகை விடுக்கப்பட்டது.