(கல்லடி செய்தியாளர்)
காவல் தெய்வமாகவும், காக்கும் சக்தியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருள்பாலிப்பவளாகவும் விளங்கும் மட்டக்களப்பு தாழங்குடா அருள்மிகு நரசிங்க காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 30 திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள தீமிதிப்புடன் ஆலய உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
இதன்போது வியாழக்கிழமை (28) அம்மனுக்கு விஷேட பூசைகள் நிகழ்த்தப்பட்டு, அம்மன் விதியூலா வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார்.
இவ்வாலய உற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதம பூசகர்களான செ.விமலேஸ்வரன், சி.அன்புராசா மற்றும் உதவிப் பூசகர்களான செ.நகுலேஸ்வரன், சக்தி ஸ்ரீ குருகுல மாணவர்களால் நிகழ்த்தப்படவுள்ளது.

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




