சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா தினம் கொண்டாட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாக முன்றலில் இடம் பெற்றது .
இவ் நிகழ்வில் மாவட்ட இராணுவ,மற்றும் காவல்துறை மேலதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் , செயலக உத்தியோகத்தினரும் கலந்து கொண்டார்கள் ..இவ் நிகழ்வின் போது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபளிக்கும் வகையில் பாரத நாட்டிய மற்றும் கோலாட்ட நடனங்கள் மாணவ மாணவிகளினால் மிக சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.
மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த ஜெர்மன் மற்றும் பிரித்தானியா பிரஜைகள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிட தக்கது .நிகழ்வின் போது உள்ளுர் பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களின் உணவு உற்பத்திகள் காட்சிபடுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது
மேலும் சுற்றுலா துறையை மேன்படுத்துவதற்காக அரசாங்க அதிபரினால் படகு சவாரி சேவை ஒன்றும் கோட்டை முன்றல் வாவியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .







































