சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி காத்தான்குடியில் இரத்தக் கொடையாளர்கள் கௌரவிப்பு


 
 





 
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி (ஜுன் 14) காத்தான்குடி தள வித்தியாசாலை குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்
குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும், இரத்தான முகாமும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
காத்தான்குடி தள வித்தியாசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுனன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பத்து தடவைகளுக்கு மேலாக இரத்த தானம் வழங்கிய கொடையாளர்கள் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை இதுவரை 52 தடவைகள் இரத்ததானம் செய்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம். இப்றாஹீமுக்கு விசேட பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர காத்தான்குடி தளவைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரியொருவர் இல்லாதநிலையில் இரத்த வங்கி செயற்பாட்டினை முசிறப்பாக முன்னெடுத்துச் சென்ற வைத்திய அதிகாரி அலிமா றஹ்மன் சம்மேளனத்தினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்படார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திருமதி மதனழகன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர், தள வைத்தியசாலை வைத்தியர் ஜே.நித்தியானந்தனா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் காத்தான்குடி குருதி கொடையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் குருதி கொடையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இன்றைய இரத்த தான முகாமில் ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் மனிதநேயமிக்க இச் செயற்பாட்டில் கலந்துகொண்டதுடன் சுமார் 111 பைன்ட் குருதியும் தானம்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.