ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது -பசில் ராஜபக்ச

 


இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாக தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது.

இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது.

 ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவி கேட்டு வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.