இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பில் போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கைது.

 


இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் அதிகாரி  ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாணந்துறை டிப்போவின் சாரதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரான சாரதியிடம் 15,000 ரூபாய் இலஞ்சம் கேட்ட போது  பாணந்துறை டிப்போ வளாகத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இன்று (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.