அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 


அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கிடையில் அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் விளையாட்டு திறமைகளை அதிகரிப்பதற்காகவும், பிரதேச செயலகங்களிடையே நட்புறவை ஏட்படுத்துவதற்காகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளது .

போட்டித் தொடரின் இறுதி சுற்றிற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினரும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக அணியினரும் தெரிவாகியுள்ளனர்.

நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற மாவட்ட செயலக அணியினர் களத்தடுப்பில் ஈடுபட்டத்துடன், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக அணியினர் முதல் துடுப்பாட்டத்தை மேற்கொண்டு 10 ஓவர்களில் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.62 ஓட்டங்களை இலக்காக கொண்டு
துடுப்பாட்டத்தினை மேற்கொண்டமாவட்ட செயலக அணியினர் 59 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிகொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மேகன்,விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பண்ணிப்பாளர் என்.எம்.நௌபிஸ் , உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், மாவட்ட செயலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு இப்போட்டித்தொடரில் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக எல்லே விளையாட்டு சுற்றுப்போட்டி மகளிருக்காக இடம்பெற்றது. 11 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வீராங்கனைகள் இப் போட்டித்தொடரில் பங்குபற்றியிருந்ததுடன், இறுதிச்சுற்றுக்கு வாகரை பிரதேச செயலக அணியும், மாவட்ட செயலக அணியும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இரு அணியினரும் திறமையாக களமாடி சமநிலையில் ஓட்டங்கள் பெற்றதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நாணய சுழற்சியில் வாகரை அணியினர் வெற்றிபெற்று சாம்பியனாக தெரிவாகியுள்ளது.