சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியில் மாணவர்களுக்காண பயிற்சி பாசறை இடம் பெற்றது.

 


 

சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியில் மாணவர்களுக்காண பயிற்சி பாசறை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட உளவள அதிகாரி ஜனார்தனி நரசிம்மன் தலைமையில் இடம் பெற்றது.

பாடசாலை மாணவர்களின் உளநலத்தினை மேம்படுத்துவதற்கும் அவர்களுடைய ஆளுமை மற்றும் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி பாசறை இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமிவிபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் வளவாளர்களினால் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் வரைவதற்கான நுட்பமுறை மற்றும் ஆலோசனைகளை வழங்கியதுடன், பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவியருக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி.பத்மநாதன், அருவி பெண்கள் வாலையமைப்பின் பணிப்பாளர் திருமதி.மயூரி ஜனன் மற்றும் மாவட்ட செயலக அலுவலக உதவியாளர் கே. எம்.ரிழ்லா, மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இணைப்பாளர் ப.தினேஷ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உளநல உத்தியோகத்தர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.