விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும்மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

 


பட்டிருப்பு போரதீவு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட கோயில் போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.அருள்ராஜா, உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ரி.,தயகுமார், பிரதி அதிபர் குணநாயகம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களுக்கு அடுத்ததாக
சக மாணவர்களுக்கு முன்மாதிரியான மாணவர்களாவும், கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குபவர்களாக மாணவத்தலைவர்கள் விளங்குகின்றனர். பாடசாலையின் நற்பெயரைக் கட்டியெழுப்புவதில் மாணவர் தலைவர்களுக்கு பெரும் பொறுப்புஇருப்பதனை இச் சின்னம் சூட்டும் விழா சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.