தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் தாய், பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





