அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் செலுத்தப்படாத உண்டியல்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்காகவே புதிய நிதி மற்றும் வரிக் கொள்கைகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர், தியாகங்களைச் செய்யாமல்
அரசாங்க வருவாயை அதிகரிப்பது கடினம் எனவும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் வரி நிர்வாகத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகள்
முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





