மூன்றாம் நிலை தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அபிவிருத்திக்கான மாவட்டத்தின் மீளாய்வு இணைப்பு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

 


மூன்றாம் நிலை தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அபிவிருத்திக்கான மாவட்டத்தின் மீளாய்வு இணைப்பு கூட்டம் நேற்று  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

மாவட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 7 உப குழுக்களின் அறிக்கைகள் இன்று மீளாய்வு செய்யப்பட்டு அதனை புதிப்பிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் இன்றைய மீளாய்வு இணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணிநவருபரஞ்சனி முகுந்தன் , கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றுகின்ற நிறுவன பிரதிநிதிகள் , பிரதேச செயலாளர்கள் . கல்வி திணைக்கள அதிகாரிகள் ,தொழில் பயிற்சி நிறுவனங்களில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்