பிறவி வலைபாதம் உடைய குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் வைத்திய சிகிச்சைக்காக வழிகாட்டல் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத பிள்ளைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதனூடாக நிறைந்த ஊனத்தை தவிர்ப்பது தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வாக இன்று நடைபெற்றது
சர்வதேச கெண்டிக்கப் நிறுவனத்தின் செயல்திட்ட உத்தியோகத்தர் முகமட் அகீல் ஒருங்கிணைபில் இயுமினிட்டி மற்றும் இன்குலூசன் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் சாள்ஸ் மெரின் தலைமையில் நடாத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான செயலமர்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை எழும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் சுதர்சன் சுந்தரலிங்கம் , சிரேஷ்ட இயன் மருத்துவ நிபுணர் பறக்கத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த செயலமர்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள் , அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.





