மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மட்டிக்கழி செழியன்பூங்காவினை சுற்றுமதிலுடன் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் திருமதி சசிகலா விஜயதேவாவின்
முன்மொழிவுக்கு அமைவாக இந்த புனரமைப்புக்கான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு
இன்று பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின்
உறுப்பினர் திருமதி சசிகலா விஜயதேவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக
கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மதிவண்ணன்,பிரதி ஆணையாளர் சிவராஜா உட்பட கிராம அபிவிருத்தி சங்கம்,விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையிலிருந்த குறித்த பூங்காவினை புனரமைத்துதருமாறு மட்டிக்கழி கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மட்டிக்கழி கதிரவன் விளையாட்டுக்கழகம் என்பன விடுத்த கோரிக்கைகள் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் திருமதி சசிகலா விஜயதேவா ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 15இலட்சம் ரூபா ஓதுக்கீடுசெய்யப்பட்டு சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர் பூங்கா உட்பட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் பூங்காவில் முன்னெடுக்கப்படவுள்ளது.





