."ஒவ்வொருவரையும் கவனித்து கொள்வோம்" -இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் ,வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உதவித்திட்டம் .
தற்போது நாடு எதிர் நோக்கி உள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 08-பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இதுவரை அரச கொடுப்பனவுக்காக காத்திருப்பு பட்டியலிலுள்ள மாற்று திறனாளிகள் ,வயோதிபர்கள் அவர்களது குடும்பங்கள் பயன் பெரும் வகையிலான உதவித்திட்டமானது CBM நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் இந்த நிறுவனத்தின் பங்காளர் நிறுவனங்களான CAMID , PPCC-மற்றும் YMCA-ஊடாக மாவட்ட செயலகத்துடன் இணைந்து 3000 பயனாளிகளுக்காக தலா 5000= கொடுப்பனவானது மண்முனை வடக்கு , ஏறாவூர் பற்று ,ஏறாவூர் நகரம், கோறளை பற்று மத்தி, கோறளை பற்று மேற்கு , மண்முனை மேற்கு காத்தான்குடி மற்றும் போரதீவு பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 3000 மாற்று திறனாளிகள் வயோதிபர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது .
இதன் ஆரம்ப நிகழ்வாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 30 மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அரச அதிபர் திரு .K- கருணாகரன் தலைமையில் காசுக்கட்டளைகள் வழங்கி வைக்கப்பட்டன . இந்த நிகழ்வுக்கு அதிதிகளாக CBM நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வாணி சுரேந்திரநாதன் அவர்களும் , மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் லக்ஷனியா பிரசாந்தன் அவர்களும் , அத்துடன் CAMID-திட்ட பணிப்பாளர் திரு K-காண்டீபன் ,YMCA-செயலாளர் திரு பற்றிக் அவர்களும் PPCC நிறுவனத்தின் நிறுவக அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் I. J சில்வெஸ்டர், திட்ட இணைப்பாளர் ஜெகன் ராஜரெட்ணம் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு .சா -அருள்மொழி ,பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு ராஜ்மோகன் அவர்களும் மற்றும் பிதேச செயலக உத்தியோகத்தவர்கள் , எதிர் நீச்சல் மாற்று திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .






























