உயிரிழந்த இலங்கையரின் உடலை கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் செலவாகும் என்பதனால் நிதியை வழங்குவதில் சிக்கல் ?

 


வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த இலங்கை தமிழரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வியட்நாம் முகாமில் 37 வயதுடைய சுந்தரலிங்கம் கிரிகரன் என்பவர்  தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தந்தையின் முகத்தை கடைசியாக குழந்தைகளுக்கு காட்ட உதவுகள் என்று இலங்கையில் வாழும் அவரது மனைவி உருக்கமாக வேண்டுகோளினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தரப்பிலிருந்து இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரிழந்த இலங்கையரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் செலவாகும் என்பதனால் நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் உடலை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது.