உலகின் மிக கொடூரமான சர்வாதிகாரி. மற்ற சர்வாதிகாரிகளுக்கெல்லாம் நாடு, இனம் என ஏதோ ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் எந்த நோக்கமும் இல்லாமல் வெறும் மனித வேட்டை மட்டுமே ஆடிய கொடிய மனிதன் தான் இவன்.
6.4"அடி உயரம் 135கிலோ எடை கருநிற தோற்றம் கொண்ட இவன் இளமையில் குத்து சண்டை வீரன். இவனுக்கு வெளியே தெரிந்த வரை 6மனைவிகள். குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் 43 முதல் 54 இருக்கும் என்கிறார்கள்.
1971 முதல் 1979 வரை உகான்டாவின் அதிபராக இருந்தான். 1972-ல் ஆசியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். கிட்டதட்ட 70,000 மக்கள் வெளியேறினர். பொருளாதாரம் கடும் வீழ்ச்சி. 1976ல் ஒரு இஸ்ரேல் விமானம் கடத்தபட்டபோது, கடத்திய தீவிரவாதிகளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தான்.
இவனது ஆட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் இவனை பற்றி எழுதிய புத்தகத்தில் யாருக்கும் தெரியாத விஷயங்களை குறிப்பிடுகிறார். அதில் அவன் மனித மாமிசத்தின் ருசியை பற்றி பல அமைச்சர்களிடம் பேசியதாகவும், அதை சிறுத்தை மற்றும் குரங்கு மாமிசத்தோடு ஒப்பிட்டதாகவும் சொல்கிறார்
இவன் மனைவிகளின் முன்னாள் காதலர்களை எல்லாம் கொன்றுவிடுவானாம். ஒரு முறை அவன் 5ம் மனைவி இவன் ரகசிய அறையை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று விரும்பி உள்ளே நுழைந்த போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானாள், அவன் காதலன் தலையை வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்தான் இந்த கொடியவன்.
அந்த நாட்டில் அவன் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டான் என்ற கணக்கே இல்லை. அப்படி உறவு கொள்ள யாரை வேண்டுமானாலும் கொலை செய்வானாம். நாட்டின் தலைநகர் கம்பலாவின் அரசு மருத்துவமனையில் அடிக்கடி சடலங்களின் உறுப்புகள் காணாமல் போவது சகஜமாம். இவனால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களுடன் சிறிது நேரம் தனிமையில் இருப்பானாம்.
இதுவரை இவனால் கொல்லபட்டவர்கள் எண்ணிக்கை 3,00,000கும் அதிகமாகும். 1979ல் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் நாட்டை விட்டு லிபியாவிற்கு ஹெலிகாப்டரில் ஓடினான். 10 ஆண்டுகள் அங்கு இருந்த பின் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் சவூதி அரேபியாவுக்குள் தஞ்சம் அடைந்தான். 78வது வயதில் பல மாதங்கள் கோமாவில் கிடந்தான். இறக்கும் தறுவாயில் கூட உகான்டா வர அப்போதைய அரசு மறுப்பு தெரிவித்தது.
கொடூரம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் குடுத்தால் அது இடி அமீன் எனலாம்.