எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பயன்?

 

 ருத்ரா-விசேட நிருபர் 

 எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பயன்?


காகம் சனி பகவானுடைய வாகனமாக இருக்கின்றது. மேலும் பித்ரு அம்சமாகவும் பாரக்கப்படுகின்றது.

புண்ணிய கருமங்களுக்கு ஏற்ப காகத்தின் மூலம் சில அறிகுறிகளை இறைவன் உணர்த்துகின்றார்.

காகம் கரையும் பலன்கள்

¤. கிழக்கு :-
☆. எடுத்த விசயம் லாபமாக முடியும்.
☆.அரசு ஆதரவு பெருகும்.
☆.தங்க நகை சேர்க்கை உண்டாகும்.
☆.நட்பு வட்டாரம் அதிகமாகும்.

¤. தென்கிழக்கு :-
☆. தங்கத்தால் இலாபம் பெருகும்.
☆. பகைவர் விலகுவர்.

¤. தெற்கு :-
☆. எடுத்த காரியம் இலாபமாக முடியும்.

¤. தென்மேற்கு :-
☆. பொருள் இலாபம் ஏற்படும்.
☆. தயிர் , எண்ணெய் போன்ற உணவுப் பொருள்/ உணவுப் பொருளோடு சம்பந்தப்பட்ட பொருளால் அதிஷ்டம் உண்டாகும்.

¤. மேற்கு:-
☆. மனதிற்கு இனிய செய்தி வரும்.
☆. கடலில் இருந்து பெறும் பொருளால் இலாபம் கிடைக்கும்.

¤. வடமேற்கு:-
☆. எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்.

¤. வடக்கு:-
☆. வாகனத்தால் இலாபம்.
☆. வாகன சேர்க்கை உண்டாகும்.
☆. புது வஸ்திர சேர்க்கை உண்டாகும்.

¤. வடகிழக்கு:-
☆. கையில் உள்ள பொருள் விரயமாகும்.

குறிப்பு :-

●. நீங்கள் வெளியில் செல்லும் போது உங்களுக்கு நேரெதிரே காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்தப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

●. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே காகம் சூரியனைப் பார்த்து கரைந்தால் அது அபசகுணம்.

●.காகம் நீங்கள் வீட்டில் இருந்து செல்லும் பொழுது வலப்புறம் இருந்து இடப்புறம் சென்றால் லாபமும் இடப்புறம் இருந்து  வலப்புறம் பறந்து சென்றால் நஷ்டமும் ஏற்படும்.