வரதன்,
தீபத்திருநாளாம் தீபாவளியை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரினை ஒளியூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற கல்லடி பாலத்தினை ஒளியூட்டி திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்தமிழ்நாடு சென்னை மாவட்ட முன்னாள் ஆளுநர் என்.எஸ்.சரவணன் கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்
தீபாவளியை இந்துக்கள் மிக கோலாகலமாக கொண்டாடிவரும் நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையும் இதனை அனுஸ்டித்துவருகின்றது
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தனஞ்செயன்,மாநகரசபை உறுப்பினர்கள், தமிழ்நாடு சென்னை மாவட்ட முன்னாள் ஆளுநர் என்.எஸ்.சரவணன், ரோட்டரிக் கழகத்தின் தன்வந்திரி செயற்திட்ட பிரதானி டி.ஆர்.தனசேகர், ரோட்டரிக் கழகத்தின் சிறப்பு முன்னெடுப்புக்களுக்கான பிரதானி எஸ்.சாய்சேக்ஷன் ரோட்டரி வலயம் 5 தெற்காசியா உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஜெகவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இதன்போது கல்லடி புதிய பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கார மின் வளைவு ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதனை பெருமளான கண்டுகளித்ததையும் காணமுடிந்தது.
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




