( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்
நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரான் குளம் விவேகானந்தர் பூங்காவில் அழகான
சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலை நேற்று (17) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பூங்காவின் பிரதானி க.பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் உப தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களால் வைபவரீதியாக விவேகானந்த பூங்காவின் சிறுவர் விளையாட்டுப் பகுதியில் இச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் இலங்கைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் ,ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ்,
கோணம்பட்டி இராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ ,ஊட்டி மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ உள்ளிட்ட பல துறவிகள் பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பூங்காவின் ஸ்தாபகர் சுவிஸில் வாழும் பரோபகாரி க.சற்குணேஸ்வரன் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுவாமிகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.














