மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தினால் புலமைப்பரிசில் முதல் பல்கலைக்கழகப் பட்டம் வரை கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் .

 















ஷிவகுமார்

மட்டக்களப்பு, கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் முதல்தரப் பட்டம் பெற்ற பட்டதாரியும் கல்லடி வேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணவர்களான உதய சங்கர் சஸ்விக்கா 147 புள்ளிகளையும், சஞ்சுதன் ரித்திகா 134 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்தமைக்காகப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், தரமுயர்த்தப்பட்ட ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய முதலாவது மாணவர் அணியில் சித்தியடைந்த பத்து மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்:

  1. K. துஷாதன்

  2. R. சுலக்க்ஷி பாவியா

  3. S. சதுர்க்கா

  4. S. ஹர்ஷினி

  5. K. நிதிஸ்

  6. M. டிஷான்

  7. M. டிலோன்

  8. K. அனுமிதா

  9. S. சுவஸ்திக்கா

  10. S. ஜெயகீதா

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் நடனத்துறையில் முதல்தரச் சிறப்பு நுண்கலைமாணி (First Class – Master of Fine Arts) பட்டத்தைப் பெற்ற கல்லடியைச் சேர்ந்த ரஞ்சன் மதுஷாவும் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வில் அவர் சமூகமளிக்க முடியாத காரணத்தினால், அவருக்கான நினைவுச் சின்னத்தை அவரது தாயார் பெற்றுக்கொண்டார்.

பாடசாலை மாணவர்களின் கல்விச் சாதனைகளை ஊக்குவிப்பதுடன், பல்கலைக்கழக மட்டத்தில் உயரிய கல்விச் சாதனைகளைப் படைத்தவர்களையும் அடையாளம் கண்டு கௌரவிக்கும் வகையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

இத்தகைய கௌரவிப்புகள் மாணவர்கள் மத்தியில் கல்வி மீதான ஆர்வத்தையும், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.