வரதன்,
வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் அழகான நாடு வளமான வாழ்க்கை அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியிலும் தொடர்ச்சியாக அமைத்து கொடுக்கப்பட்டு வருகின்றன
ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதே வேளை மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தேசிய வீடமைப்பு மாவட்ட அதிகார சபையின் முகாமையாளர் T. சுபாஸ்கரன் தலைமையில் நேற்று 10 .11.2026 நண்பகல் இடம்பெற்றது
இந்த புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.
இதன்போது போரதீப்பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர் S. ரங்கநாதன் திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சுதாகரன் - தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகஸ்த்தர் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பனாளிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 455 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
.jpeg)

.jpeg)


.jpeg)





