மட்டக்களப்பு மாவட்டத்தில் தீபத் திருநாளை முன்னிட்டு இந்து ஆலயங்களில் தீபங்களுக்கு ஒளியேற்றி விசேட வழிபாடுகள் முன்னெடுப்பு








 வரதன்.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமானமட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன்   ஆலயத்தில் இன்று காலை அடியார்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் ஆலய பிரதம குரு சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் தீபத்திருநாள் பூசைகள் பக்தி பூர்வமாக இடம் பெற்றது

 இதனை முன்னிட்டு 
ஆலயத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களால் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் நெய்விளக்கு  தீபங்களை ஒளி ஏற்றி  தீபத்திருநாள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்

 இன்றைய விசேட தீபாவளி திருநாள் வழிபாடுகளை முன்னிட்டு ஆலயம் அலங்கரிக்கப்பட்டதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்